ட்விட்டர் சமூக வலைத்தளத்துக்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை

0 4507

கவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளுக்கு டுவிட்டர் உடன்படா விட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என இந்திய அரசு இறுதியாக எச்சரித்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சமூக வலைத்தளமான டுவிட்டர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் எனக் கூறி மத்திய அரசு இருமுறை அறிவிக்கை அனுப்பியது. இருமுறையும் டுவிட்டர் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றும், திகைப்பூட்டும் வகையில் உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இறுதி வாய்ப்பாக மீண்டும் ஒருமுறை அனுப்பிய அறிவிக்கையில், சட்டத்துக்கு உட்பட்டு நடக்காவிட்டால் இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி கடும் எதிர்விளைவுகளுக்கு உள்ளாக நேரிடும் என எச்சரித்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் மூன்றாமவரால் இடப்படும் பதிவுகளுக்கு நிறுவனம் பொறுப்பேற்பதில் இருந்து விலக்களிக்கப்படாது என்றும் எச்சரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments