தமிழ்நாட்டில் மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் -தமிழக அரசு உத்தரவு

0 4420
தமிழ்நாட்டில் மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் -தமிழக அரசு உத்தரவு

ந்தியக் காவல் பணி அதிகாரிகள் 26 பேரைத் தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. மத்தியச் சரக ஊழல் தடுப்புக் கண்காணிப்பாளராக இருந்த பொன்னி, சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த சுஜித் குமார் சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கட்டாயக் காத்திருப்பில் இருந்த துரை காவல்துறைத் தலைமையகத்தில் உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுவழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக் கண்காணிப்பாளராக இருந்த சாந்தி மாநில மனித உரிமை ஆணையக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகரக் காவல் துணை ஆணையராக இருந்த மகேஷ் குமார் சேலம் மண்டல அமலாக்கத்துறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments