ஆந்திராவில் இரு சக்கர வாகனத்தில் வந்த மருத்துவ பணியாளரை தாக்கிய போலீஸ்.... நடுத்தெருவில் தரதர வென இழுத்துச் செல்லப்பட்டதால் கண்டனம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருத்துவத்துறை இளம் பெண் அலுவலர் ஒருவர் நடுத்தெருவில் போலீசாரால் தாக்கப்பட்டு, தரதர வென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் அந்த பெண் மருத்துவ ஊழியர் பணி முடித்து வீடு திரும்பும் போது ஊரடங்கை காரணம் காட்டி போலீசார் அவரது இருசக்கர வாகனத்தை ராமா டாக்கீஸ் ஜங்சன் அருகே தடுத்து நிறுத்தினர். அவருக்கு அபராதம் விதித்த போது மருத்துவமனையின் அனுமதி கடிதத்தை காட்டிய போதும் போலீசார் கேட்கவில்லை. இதில் காவல்துறை அதிகாரிக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர்கள் அவரை தாக்கியதுடன் இரண்டு பெண் போலீசார் அவரை கிடுக்கிப்பிடி போட்டு தரதரவென சாலையில் இழுத்துச் சென்றனர்.
மருத்துவமனையின் அனுமதி சான்று, அடையாள அட்டை எல்லாம் இருந்தும் போலீசார் தம்மிடம் அதிகாரத் தோரணையில் அத்துமீறியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ காட்சியை அந்தப் பெண் சமூக ஊடகங்களில் வெளியிட்டு நியாயம் கேட்டுள்ளார்.
Comments