”டிஜிட்டல் இறையாண்மையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” -மத்திய அரசு
இந்தியா ஒருபோதும் டிஜிட்டல் இறையாண்மை கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் புதிய டிஜிட்டல் கொள்கை தொடர்பாக சட்டரீதியான யுத்தம் தொடங்கியுள்ள நிலையில் அரசின் புதிய சட்டங்களை ஏற்காவிட்டால் தடைவிதிக்கப்படும் என்று எச்சரித்து டிவிட்டருக்கு இறுதி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்தியாவில் தொழில் புரியும் சமூக ஊடக நிறுவனங்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும் என்றார்.
சமூக ஊடகங்கள் வழியாக அவதூறு தவறாகப் பயன்படுத்துதல் ஏய்த்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கவே சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
சமூக ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் அதன் ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர்கள் யாரும் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்
Comments