கோவா மாநிலத்தில் ஜூன் 14 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு..!
கோவா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அம்மாநிலத்தில் பொதுமுடக்கம் வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பதிவில், அத்தியாவசியப் பணிகளுக்கான கடைகள் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 3 வரை அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் கட்டடப் பராமரிப்புப் பணிகளுக்கான கடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படுவதாகவும் சாவந்த் குறிப்பிட்டுள்ளார்.
அம்மாநிலத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஊரடங்கு நாளையுடன் முடிவதாக இருந்த நிலையில் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Comments