கொரோனா குறைந்து ஊரடங்கை தவிர்க்க இது தான் ஒரே வழி..! தமிழக அரசு புதிய அறிவுறுத்தல்
கொரோனாவை கட்டுப்படுத்தி ஊரடங்கை தவிர்ப்பதற்கு, கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து தமிழ்நாடு அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கோவை, ஈரோடு, மதுரை, நாமக்கல், திருப்பூர், சேலம், திருச்சி, நீலகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அங்கு மிகவும் முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா சோதனை முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதுடன், பரிசோதனை செய்துகொண்டவரை தனிமைப்படுத்த வேண்டும்.
கொரோனா உள்ள ஒருவர் வீட்டுத் தனிமையில் இருந்தால் அது குறித்த அறிவிப்பை அவர் வீட்டில் ஒட்ட வேண்டும்...
கொரோனா பாதித்தோரும் அவர் குடும்பத்தினரும் வீட்டைவிட்டு வெளியே வருவதால் அண்டை வீட்டாருக்கு கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளது.
ஒரு தெருவில் மூன்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா இருந்தால் அதைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துக் கண்காணிக்க வேண்டும்.
குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தொடர்பு கண்டறிதல் அவசியம்.
வீட்டுத் தனிமைக்கான வசதி இல்லாவிட்டால் , கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் உதவியாளர்கள் வந்து செல்வது குடும்ப உறுப்பினர்களுக்கும் பிறருக்கும் நோய்ப் பரவலை அதிகரிக்கும்.
உதவியாளர்கள் கொரோனா வார்டுக்குள் செல்லஅனுமதிக்க கூடாது என்றும், இதனை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா நோயாளியின் நிலையை உறவினர்கள் அறிந்துகொள்ளும் வகையில் மருத்துவமனைகளில் தகவல் மையங்கள் அமைக்க வேண்டும்.
Comments