ஆனியன் தோசைக்கு ஆர்டர் கொடுத்து சிவிவி 3 நம்பர கேட்குரான்..! வடக்கன்ஸ் மோசடி மூளை..!

0 34549

டெல்லியில் இருந்து தஞ்சாவூரில் உள்ள உணவக உரிமையாளருக்கு வாட்ஸ் அப்பில்  ஆன் லைனில் உணவு ஆர்டர் செய்து ,  வங்கிகணக்கில் இருந்து பணம் திருட முயன்ற  வட மாநில ஏ.டி.எம் கார்டு மோசடி கும்பலால், உணவக உரிமையாளர் தயார் செய்த உணவுகளை தானம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆண்டுக்கணக்கில் மோசடிக்கு வலைவிரிக்கும் வடமாநிலத்தவர்களின் அட்டகாசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள எம்.ஐ.ஜி காலணி பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். கேட்டரிங் தொழில் செய்து வரும் இவர் ஆன்லைன் வழியாக ஆர்டர் எடுத்து ஸ்விக்கி, சொமோட்டா மூலம் எடுத்த ஆர்டரை டோர் டெலிவரி செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி இரவு கார்த்திகேயன், செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட நபர் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் கலந்து பேசி உள்ளார். பேசியவரின் மொழியை வைத்து வட நாட்டுக்காரர் என கார்த்திகேயன் புரிந்து கொண்டார். எதிர் முனையில் பேசிய நபர் தன்னை ஆர்மி ஆபிசர் என அறிமுகப்படுத்தி கொண்டு 20 ஆனியன் தோசை, 10 முட்டை தோசை, 5 பிளேட் தயிர் சாதம், 5 நூடுல்ஸ் , 12 ஆப்பிள் ஜூஸ் ஒரு மணி நேரத்தில் வேணும் என்று ஆர்டர் செய்துள்ளார். விலை விவரம் தொடர்பான மெனுவை, தனது வாட்சப்பிற்கு அனுப்பி வையுங்கள் என கேட்டுக் கொண்டார்.

அவரும் மொத்தமாக வாட்சப் குறுந்தகவல் மூலம் ஆர்டரை உறுதிப்படுத்தி கொண்டு உணவினை தயாரித்து முடித்த கார்த்திகேயன் ஆர்மி ஆபிசரை தொடர்பு கொண்டு பணம் கொடுத்து விட்டு உணவை வாங்கி செல்லுமாரு கூறியுள்ளார். அதற்கு கையில் பணம் இல்லை என்னுடைய கிரெடிட் கார்டு நம்பரை உங்கள் வாட்சப்புக்கு அனுப்பி இருக்கிறேன். நீங்களும் உங்கள் கிரெடிட் கார்டு நம்பரை எனது வாட்ஸ் அப்புக்கு அனுப்புங்கள் பணம் கிரடிட் செய்து விடுகிறேன் என கூறியுள்ளார்.

அந்த கார்டில் சந்தீப் ராவத் என்று இருந்ததால் , இதில் ஏதோ தவறு நடப்பது போல உணர்ந்த கார்த்திகேயன், டேய் நீ, ஏ.டி.எம் கார்டில், பின்புறம் உள்ள சிவிவி 3 நம்பர் சொல்லுங்கன்னு சொல்ற, பிராடுதானே என கேட்டுள்ளார். உடனடியாக எதிர்முனையில் பேசிய அந்த நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, கார்த்திகேயன் நம்பரையும் பிளாக் செய்துள்ளான்.

இதற்கிடையே நேரம் இரவு 9 மணியை கடந்து விட்டதால் இதனால் குழப்பம் அடைந்த கார்த்திகேயன், சீட்டிங் வடமாநில ஆசாமி கொடுத்த ஆர்டர்படி தயாரித்த உணவு வீணாக கூடாது எனக்கருதி தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு எடுத்துச்சென்றார். அந்த மருத்துவமனையில் பாதுகாப்புக்கு நின்றிருந்த பெண் காவலர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடம் உணவு வழங்கி தான் ஏமாற்றப்பட்டதை கவலையுடன் பகிர்ந்துள்ளார்.

இதனைக் கேட்ட அந்த பெண் காவலர்கள் உணவு வாங்கி கொண்டு அவருக்கு பணத்தை கொடுத்துள்ளனர். அத்தோடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பணத்தை கார்த்திகேயன் சட்டை பாக்கெட்டில் திணித்துள்ளனர். எனக்கு பணம் வேண்டாம் உணவு கொடுத்த திருப்தியே போதும் எனக் கூறி விட்டு பணம் வாங்காமல் கார்த்திகேயன் திரும்பியுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் கிடைக்கும் ஆர்டருக்கு ஏற்ப உணவுகளை தயார் செய்து விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடித்தனம் நடத்திவரும் கார்த்திகேயன், தான் தயாரித்த உணவுகள் வீணாகக்கூடாது என்று தாயன்போடு உணவுகளை தானமாக வழங்கியது வரவேற்புக்கு உரியது. அதே நேரத்தில் தமிழகத்தில் பலரிடம் ஏ.டி,எம் கார்டில் கடைசி மூன்று இலக்க நம்பரை சொல்லுங்க என்று கேட்டு ஆண்டு கணக்கில் மோசடி வித்தையை அரங்கேற்றிவருகின்றனர்.

அந்த வடமாநில மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தமிழக காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments