விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்க வங்கிகளுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி
கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவதற்காக விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்க வங்கிகளுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் பெற்ற கடன் ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால் அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருந்தது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகள் சேர்ந்து விஜய் மல்லையாவுக்கு 5600 கோடி ரூபாய் கடன் கொடுத்திருந்தன.
அந்தக் கடனைத் திரும்பிப் பெறுவதற்காக மல்லையாவின் சொத்துக்களை விற்க அனுமதி கோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தன.
இந்த வழக்கில் மல்லையாவின் நிலங்கள், பங்குப் பத்திரங்களை விற்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகப் பஞ்சாப் நேசனல் வங்கி மேலாண் இயக்குநர் மல்லிகார்ச்சுன ராவ் தெரிவித்துள்ளார்.
Comments