புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்காவிட்டால் சட்ட நடவடிக்கை..! டுவிட்டர் நிறுவனத்திற்கு ஐ.டி. அமைச்சகம் இறுதி எச்சரிக்கை
புதிய டிஜிட்டல் கொள்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்திய அரசின் ஐ.டி. சட்டங்களுக்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஏற்பதாக அறிவித்துள்ள நிலையில், அரசுக்கு எதிராக டுவிட்டர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்பதற்கான கடைசி நாளான மே 26 ஆம் தேதி கடந்துவிட்ட நிலையில், ஐ.டி. அமைச்சகம், டுவிட்டருக்கு இறுதி எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது.
அதில் புதிய கொள்கைகளை ஏற்கா விட்டால், சட்டப்படியான பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.டி. அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் நேற்று நடந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
Comments