நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலத்துக்கு செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம்
மலைப்பகுதிகளுக்கு அவசரக் காரணங்களுக்கு மாவட்ட ஆட்சியர்களிடம் இ பாஸ் பெற்றுச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய இடங்களுக்கு அவசரக் காரணங்களுக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்றுப் பயணிக்க அனுமதிக்கப்படும்.
கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 10 விழுக்காடு பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்.
நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் தேவையின்றி வீட்டில் இருந்து வெளியே வருவதையும், கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி ஆலோசனை, சிகிச்சை பெறவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments