தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட 32,646 படுக்கைகள் காலியாக உள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட 32ஆயிரத்து 646 படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக கூடுதலாக 2ஆயிரம் மருத்துவர்கள், 6ஆயிரம் செவிலியர்கள், 3,700 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 600 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், எந்தவொரு இடத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என திட்டவட்டமாக கூறினார்.
கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தமிழகத்துக்கு 30ஆயிரம் என்ற அளவில் மருந்து தேவைப்படுகிறது எனவும், ஆனால் மத்திய அரசு 1790 மருந்துகள் மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Comments