காயிதே மில்லத்தின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை
கண்ணியமிகு காயிதே மில்லத்தின் 126-வது பிறந்தநாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்திருக்கும் காய்தே மில்லத் நினைவிடத்தில், முதலமைச்சருடன் சேர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், ராஜகண்ணப்பன், சா.மு.நாசர், மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் அபூபக்கர் ஆகியோரும் காய்தே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
Comments