ரூ.43,000 கோடி செலவில் உள்நாட்டிலேயே 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை 43 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய கடற்பகுதியில் சீன போர் கப்பல்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கடற்படையை வலுப்படுத்தவும் பிராஜக்ட் -75 என்ற திட்டத்தின் மூலம் 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க பாதுகாபு அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது. மேலும் இதற்கான திட்ட கோரிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு தளவாட தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்திய நிறுனங்கள் உள்நாட்டில் தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மராட்டியத்தை சேர்ந்த Mazagon Dock மற்றும் L&T என்ற தனியார் கட்டுமான நிறுவனங்கள், 5 வெளிநாட்டு கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து விரைவில் பணியை துவக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments