இந்தியாவின் ஒரே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் குத்தகைக் காலம் முடிவடைந்ததால் மீண்டும் ரஷ்யா சென்றது

0 22802
இந்தியாவின் ஒரே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் குத்தகைக் காலம் முடிவடைந்ததால் மீண்டும் ரஷ்யா சென்றது

ந்தியக் கடற்படையில் உள்ள ஒரே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் சக்ராவின் குத்தகைக் காலம் முடிவடைந்ததால் அந்தக் கப்பல் ரஷ்யாவுக்குச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் அகுலா 2 என்ற நீர்மூழ்கிக் கப்பலை, இந்தியா கடந்த 2012ம் ஆண்டு 10 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருந்தது. 8 ஆயிரத்து 140 டன் எடை கொண்ட அந்தக் கப்பல் ஐஎன்எஸ் சக்ரா 2 என்ற பெயருடன் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியக் கடல் எல்லையைப் பாதுகாப்பதிலும், சீன போர்க்கப்பல்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும் ஐஎன்எஸ் சக்ரா நிகரற்று விளங்கியது.

இந்நிலையில் இந்தக் கப்பலில் பராமரிப்புப் பிரச்னைகள் காரணமாக இதன் குத்தகை காலம் நீட்டிக்கப்படாததால் தற்போது இந்தக் கப்பல் மீண்டும் ரஷ்யாவுக்கே திரும்பிச் செல்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments