அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் ஃபேஸ்புக் கணக்குக்கு தடை
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் ஃபேஸ்புக் கணக்கைப் பயன்படுத்த 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதளமான ஃபேஸ்புக் கணக்கை தொடங்கியிருந்த டிரம்ப், அதன் மூலம் பலரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தலைநகர் வாஷிங்டனில் ஏற்பட்ட கலவரத்திற்கு அவரது கருத்துக்களே காரணம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து அவரது ஃபேஸ்புக் கணக்கை முடக்க ஃபேஸ்புக் நிர்வாகம் முடிவு செய்து, தற்போது அதனைப் பயன்படுத்த 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரம்ப்பின் நடவடிக்கைகள் தங்கள் நிறுவனத்தின் விதிகளுக்கு முரணாக இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. உலகிலேயே பிரபலமான தலைவரின் ஒருவரின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
Comments