5ஜி இணைய சேவைக்கு எதிராக ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி : ரூ.20 லட்சம் அபராதம் விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம்
இந்தியாவில் 5ஜி இணைய சேவையை கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சு சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் எனக்கூறி ஜூஹி சாவ்லா பொதுநல வழக்கு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டதாக கூறி தள்ளுபடி செய்ததுடன் நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
Comments