கனடாவில் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி.? ஒகுஜன் நிறுவனத்துடன் கைக்கோர்க்கும் பாரத் பயோடெக்

0 3074

னடாவில் கோவாக்சின் உற்பத்தி மற்றும் விற்பனைக்காக பாரத் பயோடெக் நிறுவனம் ஒகுஜன் (ocugen) நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது.

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டுவருகிறது.

இந்த தடுப்பூசிக்கு கனடா மற்றும் அமெரிக்காவில் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒகுஜன் நிறுவனத்துடன் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்துள்ளது.

அதன்படி, ஒகுஜன் நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விற்பனையில் பாரத் பயோடெக் ஈடுபடவுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments