வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..! மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
டவ்தே புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் வந்தடைந்தால், வைகை அணையின் நீர்மட்டம் 67.85 அடியை எட்டியுள்ளது.
இதனையடுத்து அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன், மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் ஐ. பெரியசாமி தண்ணீரைத் திறந்துவைத்தார். அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திறந்துவிடப்பட்ட நீரை மலர்தூவி வரவேற்றனர். இந்தத் தண்ணீரின் மூலம் இரண்டு மாவட்டங்களிலும் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு அனைத்து வகையான கடன்களையும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
Comments