கொரோனா நோயாளியை தாக்கும் தோல் பூஞ்சை நோய்..! இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் கண்டுபிடிப்பு
இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடகத்தில் கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து குணமடைந்த நிலையில் அவருக்கு காது பகுதியில் பூஞ்சை உருவாகி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு சோதனை மேற்கொண்டதில் தோல் பூஞ்சை நோய் தாக்கி இருப்பது உறுதியானது.
கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என பூஞ்சை நோய் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தோல் பூஞ்சை நோய் தாக்கி இருப்பது மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தோல் பூஞ்சை நோயை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம் என்றும், இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments