பாகிஸ்தானின் நம்பகத்தன்மை கேள்விக்கிடமானது; எல்லையில் விழிப்போடு கண்காணிப்பதை தளர்த்த முடியாது -ராணுவ தளபதி எம்.எம்.நரவானே
பாகிஸ்தானின் நம்பகத்தன்மை கேள்விக்கிடமானது என்பதால், சண்டை நிறுத்தத்தை கடைப்பிடித்தாலும் எல்லையில் விழிப்போடு கண்காணிப்பதை தளர்த்த முடியாது என ராணுவ தளபதி எம்.எம்.நரவானே தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக சென்ற அவர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்தார். படைப்பிரிவு தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய நரவானே, தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், படைகளின் ஆயத்த நிலைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
காஷ்மீரில் தீவிரவாத செயல்பாடுகளும் கல்லெறியும் சம்பவங்களும் குறைந்திருப்பதாகவும், இயல்பு நிலை திரும்புவதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைவதாக ராணுவ தளபதி குறிப்பிட்டார்.
Comments