பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தலாமா? மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்பு
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து மாணவர் மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வாட்ஸ்ஆப் மூலமாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டு தனித்தனியாக பதில்கள் பெறப்பட்டது.
வாட்ஸ்ஆப் வசதி இல்லாத பெற்றோர்களிடம் தொலைபேசி வாயிலாக கருத்து கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தக் கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இன்று மாலைக்குள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் பெரும்பாலான பெற்றோர்கள் கொரோனா தொற்று முடிந்த பிறகு, கட்டாயம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என கூறியுள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வுகள் நடத்த வேண்டுமா அல்லது ரத்து செய்ய வேண்டுமா என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து முடிவு எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
Comments