தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் இன்று தொடங்க வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வுத்துறை
தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் இன்று தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் ஜூன் ஒன்றில் தொடங்கி ஜூலை ஐந்துக்குள் நாட்டின் கடைக்கோடிப் பகுதிகளைச் சென்றடையும் என வானிலை ஆய்வுத்துறை முன்பு தெரிவித்திருந்தது. பருவமழை தொடங்குவது இருநாட்கள் தாமதமாகும் என ஞாயிறன்று வெளியான முன்கணிப்பில் தெரிவித்தது. இந்நிலையில் கேரளத்தில் இன்று பருவமழை தொடங்கச் சாதகமான சூழல் உள்ளதாகவும், இதன் விளைவாக மாநிலத்தில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டின் வேளாண் பொருளாதாரத்துக்கு இன்றியமையாத பருவமழை தொடங்குவது, காற்றின் வேகம், மழையளவு, மேகமூட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
Comments