விளைநிலத்தில் திடீரென உருவான பெரும்பள்ளத்தால் மக்கள் அதிர்ச்சி

0 5424

மெக்ஸிகோவில் விளைநிலத்தில் ஏற்பட்ட பெரும் பள்ளத்தைக் கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கியதில் அங்கு பெரும் பள்ளம் உருவானது.

சுமார் 300 அடி அகலமும் 60 அடி ஆழமும் கொண்ட இந்தப் பள்ளத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் அப்பகுதியை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

பள்ளம் ஏற்படுவதற்கு முன் அப்பகுதியில் பெரும் இடி இடித்தது போன்ற சப்தம் கேட்டதாக விளைநிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பின்னர் பயம் தெளிந்த மக்கள் தூரமாக நின்றவாறே பெரும் பள்ளத்தைப் பார்த்தனர்.

குறிப்பிட்ட இடத்திற்கு கீழே பாறைகள் குறைவாக இருப்பதாலும், திடீரென ஏற்பட்ட நீரோட்டம் காரணமாகவும் இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments