அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பியர் இலவசம்

0 6256

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு இலவசமாக பியர் வழங்கப்படும் என்ற கவர்ச்சிகர அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்திற்குள் 70 சதவீத மக்களுக்கு குறைந்தபட்ச ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும் என்ற இலக்கை அதிபர் பைடன் அரசு முடுக்கிவிட்டுள்ளது. தற்போது வரை 63 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்த மக்களை ஊக்குவிக்க புதிய முறையை அமெரிக்க மதுபான தயாரிப்பு நிறுவனமான Anheuser-Busch கையாண்டு உள்ளது.

அதன்படி குறிப்பிட்ட நாளுக்குள் தடுப்பூசி இலக்கு அடையப்பட்டால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பியர் வழங்குவதாக அறிவித்து உள்ளது. அதேபோல்  தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள 4 முன்னணி குழந்தைகள் பராமரிப்பு நிறுவனம் முன்வந்து உள்ளது. மேலும் நாடு முழுவதும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தடுப்பூசி பிரசாரம் மேற்கொள்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments