வெள்ளி கிரகத்திற்கு இரண்டு அறிவியல்பூர்வமான பயணங்களை மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் திட்டம்
வெள்ளி கிரகத்திற்கு இரண்டு அறிவியல்பூர்வமான பயணங்களை 2028 முதல் 2030ம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த பல பத்தாண்டுகளில் இது போன்ற திட்டம் வகுக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். பூமிக்கு மிக அருகில் இருக்கும் கோள்களில் ஒன்றான வெள்ளி கிரகத்தின் தட்ப வெட்பம் மற்றும் புவியியல் தன்மையை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக 500 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்குவதாகவும் நாசா அறிவித்துள்ளது. டாவின்சி, வெரிட்டாஸ் என்று இரு திட்டங்களுக்குப் பெயரிடப்பட்டுளளது.
டாவின்சி வீனஸ் எப்படி தோன்றியது வளர்ந்தது என்று ஆய்வுகளில் ஈடுபடும். வெரிட்டாஸ் அதன் வரைபடத்தையும் புவியியல் வளர்ச்சியையும் பூமிக்கும் அதற்குமான வேறுபாடுகளையும் ஆராய உள்ளது.
Comments