குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பரிசோதனை பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடக்கம்
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பரிசோதனை பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கியது.
தடுப்பூசி திட்டத்தில் முக்கியத் திருப்பமாக இது கருதப்படுகிறது. இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 18 வயது முதல் 44 வயதுக்குரியோருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. குழந்தைகளைத் தாக்கக்கூடிய கொரோனாவின் மூன்றாவது அலை குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக்கின் உள்நாட்டு தயாரிப்பு மருந்தான கோவாக்சின் குழந்தைகளுக்கு செலுத்தத் தக்கது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், பாட்னாவின் எய்மஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
Comments