வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 2974

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனவும், தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரை, திருச்சி, கரூர்  தர்மபுரி,  கடலூர், புதுவை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments