மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளார்.
மேட்டூர் அணையின் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அந்த வகையில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாகவும், நீர் இருப்பு 61.43 டி.எம்.சியாகவும் உள்ளதால் திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 28ம் தேதியுடன் நிறுத்தப்பட உள்ளது.
Comments