மலேசிய வான்வெளியில் சீன ராணுவ விமானங்கள் அத்துமீறியதா.? சீனா - மலேசியா இடையே பதற்றம்
சீனாவின் போர் விமானங்கள் மலேசிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் ஊடுறுவியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உருவாகியுள்ளது.
சர்ச்சைக்கு உரிய தென் சீனக்கடல் பகுதியில் மலேசியாவின் நிர்வாகத்தில் உள்ள சரவக் மாகாணத்திற்கு உட்பட்ட போர்னியோ தீவிற்குள் கடந்த திங்கள்கிழமை, சீனாவின் 16 போர் விமானங்கள் நுழைந்ததாக மலேசியா குற்றம் சாட்டி உள்ளது.
சீனாவின் இந்த சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கையால் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து சீன தூதர் அழைக்கப்பட்டு அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என மலேசியா கூறியுள்ளது.
ஆனால் மலேசியாவின் வான்வெளியில் அத்துமீறவில்லை என்று விளக்கம் அளித்துள்ள சீனா, பறப்பதற்குரிய தனது உரிமையை மட்டுமே அப்பகுதியில் செயல்படுத்தி பார்த்ததாக தெரிவித்துள்ளது. எந்த நாட்டையும் இலக்கு வைத்து தங்களது விமானங்கள் பறக்கவில்லை என்று சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.
Comments