18-44 பிரிவினருக்கு தடுப்பூசி கட்டணம் ஏன்..? - தடுப்பூசி கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி
45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் போது, அதற்கு குறைவான வயதினருக்கு கட்டண தடுப்பூசி போடுவது நியாயமற்றது மற்றும் முரண்பாடான என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
18 முதல் 44 வயது பிரிவினர் தடுப்பூசி போட மிகவும் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என வெளியான தகவல்களை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தடுப்பூசிகளின் விலை விவரம், வெளிநாடுகளில் விற்கும் விலை ஆகிய விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பல நாடுகளில் தடுப்பூசி இலவசமாக போடுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அரசு தனது தடுப்பூசி திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற நீதிபதிகள் வரும் டிசம்பர் 31ந்தேதி வரை எவ்வளவு தடுப்பூசி நாட்டில் போடப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அதற்கு அரசு தரப்பில், இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Comments