ஆக்சிஜன், தடுப்பூசிகள், உயிர் காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய 45 நிறுவனங்கள் விருப்பம் - தமிழக அரசு

0 3559

க்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய 45 நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு  கூறியுள்ளது.

இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்தால், டிட்கோ நிறுவனத்துடன் கூட்டாண்மை அடிப்படையில் ஆலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வரலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை 45 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்குப் பிறகு, ஆக்சிஜன், தடுப்பூசி, மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்திக்கான  உட்கட்டமைப்புகளை நிறுவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments