ஊரடங்கு எதிரொலி : தொழிற்சாலைகள் மூடல் காரணமாக கார் விற்பனை பெரும் சரிவு

0 10768

டந்த மே மாதத்தில் ஊரடங்கு மற்றும் தொழிற்சாலைகள் மூடல் காரணமாக பெரும்பாலான நிறுவனங்களின் கார் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 691 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி சுசுகி நிறுவனம், மே மாதத்தில் 46 ஆயிரத்து 555 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இதன் மூலம் மாருதியின் விற்பனை 71 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டிற்கு திருப்பிவிடுவதற்காக தனது தொழிற்சாலைகளை மே 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மாருதி நிறுவனம் மூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை 24,552 என்றளவில் 38 சதவீதமும், ஹூண்டாய் கார் விற்பனை 30,703 என்றளவில் 48 சதவீதமும், மஹிந்திரா நிறுவனத்தின் கார் விற்பனை 8,004 என்றளவில் 56 சதவீதமும், டொயோட்டா கார் விற்பனை 92 சதவீதமும் குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments