கூகுளுக்கு இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கை பொருந்தாது - நீதிமன்றத்தில் கூகுள் நிறுவனம் வாதம்
இணைய தேடுதல் பொறியான கூகுளுக்கு இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கை பொருந்தாது என அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது.
இணையத்தில் இருந்து ஒரு பெண்மணியின் சர்ச்சைக்குரிய படத்தை அகற்றும் விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கில் கூகுள் தரப்பு இவ்வாறு கூறியது.
கூகுள் என்பது சமூக ஊடகம் போன்று செயல்படுவது அல்ல என்று அதன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மக்களுக்கும், இணையத்திற்கும் இடையே செயல்படும் ஒரு அமைப்பாக இருந்தாலும், கூகுளும் ஒரு சமூக ஊடக அமைப்பே என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்யுமாறு அதன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதைக்கேட்ட தலைமை நீதிபதிகள், இது குறித்து ஜூலை 25 க்குள் பதிலளிக்குமாறு, மத்திய-டெல்லி அரசுகள்உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
Comments