ஈன்றெடுத்த குட்டியிடம் அன்பை பொழியும் தாய் பாண்டா.. காண்போரை நெகிழ செய்கிறது .!
மலேசிய உயிரியல் பூங்காவில் லியாங் லியாங் என்ற ராட்சத பாண்டா கரடி குட்டி ஒன்று ஈன்றுள்ளது.
பிறந்து 2 நாட்களேயான குட்டியிடம் அன்பைப் பொழிந்துவரும் தாய் பாண்டாவின் செயல் காண்போரை நெகிழ செய்கிறது. பாண்டா குட்டியின் எடையை பூங்கா நிர்வாகத்தினர் கண்காணித்துவருகின்றனர்.
தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும், இது லியாங் லியாங் போடும் மூன்றாவது குட்டி என்றும் பூங்கா நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
Comments