செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவருக்கு அனுப்பிய கடிதத்தில், அந்த மையத்தை மாநில அரசிடம் ஒப்படைத்தால் தகுதியான நிறுவனத்தை கண்டறிந்து தடுப்பூசி உற்பத்தியை துவக்கலாம் என்ற கோரிக்கைக்குப் பதிலாக, மத்திய அரசே அதற்கான நடவடிக்கையை துவக்கும் என கூறியுள்ளதால், தாமதமின்றி தடுப்பூசி உற்பத்தியை துவக்குமாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.
தடுப்பூசி போட மக்கள் மத்தியில் இருந்த தயக்கவுணர்வை அரசு அகற்றி உள்ள நிலையில், மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் பற்றாக்குறையை நீக்க சிறப்பு ஒதுக்கீடாக மேலும் 50 லட்சம் டோசுகள் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
Comments