குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என அறிவிப்பு

0 3610

குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ஜூலை 1 ஆம் தேதி முதல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்சி 12ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத்திலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா தெரிவித்துள்ளார்.

அதேபோல், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களிலும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments