ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 497 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கும் பணி தொடக்கம்

0 3079

ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகைக்கான காசோலைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2020ம் ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் ஒய்வு பெற்ற 2 ஆயிரத்து 457 போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையான 497.32 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விடுவித்தார்.

அதன் தொடக்கமாக 6 ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments