மகாராஷ்டிரா அரசு மருந்து நிறுவனத்தில் கோவேக்சின் உற்பத்தி
மகாராஷ்டிர அரசின் கீழ் உள்ள ஹாஃப்கின் பயோ-பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தில் கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது.
இதற்கான அரசு அனுமதி கிடைத்துள்ளதாகவும், பாரத் பயோடெக் நிறுவனத்துடன் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் ராதோட் தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசு 65 கோடி ரூபாயும், மகாராஷ்டிர அரசு 93 கோடி ரூபாயும் வழங்குகின்றன.
8 மாதங்களில் உற்பத்தி துவங்கும் என்றும் ஆண்டொன்றுக்கு 22 கோடியே 80 லட்சம் தடுப்பூசி டோசுகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments