இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளில் ஒன்று மட்டுமே கவலையளிக்கும் வகையில் உள்ளது: உலக நலவாழ்வு நிறுவனம்
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளில் டெல்டா மட்டுமே கவலையளிக்கும் வகையில் உள்ளதாக உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்ட பி.1.617 என்கிற உருமாறிய கொரோனாவிலும் பரவல் அடிப்படையில் மூன்று வகைகள் உள்ளதாக உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதிலும் பி.1.617.2 என்கிற வகை மட்டுமே மிக அதிக அளவில் பரவி வருவதால் மக்களின் நலனுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கவலை தெரிவித்துள்ளது. இந்த வகைக்கு டெல்டா எனப் பெயரிட்டுள்ள உலக நலவாழ்வு நிறுவனம், மற்ற இரு வகைகளும் வீரியம் குறைந்தவை எனத் தெரிவித்துள்ளது.
Comments