கொரோனா 2 ஆம் அலைக்கு 594 மருத்துவர்கள் பலி: இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல்

0 4314
கொரோனா 2 ஆம் அலைக்கு 594 மருத்துவர்கள் பலி

கொரோனா இரண்டாம் அலையின் போது சிகிச்சை அளித்த மருத்துவர்களில் 594 பேர் தொற்று ஏற்பட்டு இறந்து விட்டதாக ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக டெல்லியில் 107 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். தமிழகத்தை பொறுத்தவரை, இந்த இரண்டாவது அலையில் 21 மருத்துவர்கள் கொரோனா சிகிச்சையில் தங்கள் உயிரை அர்ப்பணித்தனர். டெல்லிக்கு அடுத்தபடியாக பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தர பிரதேசத்தில் 67 பேரும், ஜார்கண்டில் 39 மருத்துவர்களும், ஆந்திராவில் 32 மருத்துவர்களும் உயிரை தியாகம் செய்தனர்.

12 லட்சத்திற்கும் அதிகமான ஆங்கில மருத்துவர்கள் உள்ள இந்தியாவில், ஐஎம்ஏ-யின் கீழ் 3.5 லட்சம் மருத்துவர்களின் விவரங்கள் மட்டுமே உள்ளன. அவர்களில் இத்தனை பேர் உயிரிந்த நிலையில், கணக்கில் வராத மேலும் பலர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments