கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிவாரண நிதி வழங்கினார் கே.ஜி.எஃப் நடிகர் யாஷ்

0 5541

கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக பிரபல நடிகர் யாஷ் வழங்கியுள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள இவர், கேஜிஎஃப் படம் மூலம் மிகப் பிரபலமானார்‍.இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், கொரோனா தொற்றால் படப்பிடிப்பின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள  3000 கன்னட தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் ஒன்றரை கோடி ரூபாயை தனது சொந்த பணத்திலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்‍.

இந்த மோசமான சூழலில்,  வலி மற்றும் இழப்புகளை சந்தித்திருக்கும் அவர்களுக்கு இத்தொகை தீர்வாகாது என்றாலும், நம்பிக்கைக்கான வெளிச்சமாக இருக்கும் என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments