உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க, இந்திய அணி நாளை இங்கிலாந்து பயணம்

0 5448

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்து பயணம் மேற்கொள்கிறது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தும் மோதுகின்றன.

இந்த போட்டியில் விளையாடுவதற்காகவும், இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் ஆடுவதற்காகவும் இந்திய அணி நாளை இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. டெஸ்ட் போட்டி தொடர் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments