இதுவரை பெரிய அளவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை -நிதி ஆயோக் உறுப்பினர்
கொரோனா தொற்று குழந்தைகளிடம் தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், இருப்பினும், அது உருமாற்றம் அடைய நேர்ந்தால் குழந்தைகளையும் பாதிக்கக் கூடும் என்று நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளுக்குப் பரவக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நமது கவனம் முழுவதும் குழந்தைகளுக்குப் பரவக் கூடிய கோவிட் 19 நோய்த் தொற்றின் மீது தான் இருக்கிறது என்று வி.கே.பால் தெரிவித்தார். தற்போதைய சூழலில் அறிகுறியற்ற நிலையே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு பாதிப்பு என்பது இதுவரை இல்லை அல்லது மிகமிகக் குறைந்த அளவில்தான் இருக்கிறது என்றும் அவர் செய்தியாளர்களிடத்தில் விளக்கம் அளித்தார். இயற்கையாக வைரஸ் தன் குணத்தை மாற்றிக் கொண்டால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற போதும் இரண்டு அல்லது மூன்று சதவீத குழந்தைகளுக்குத்தான் மருத்துவமனை சிகிச்சை அவசியமாக இருக்கும் என்று வி.கே.பால் தெரிவித்தார்.
Comments