மெகுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்குமா கரீபியன் உச்சநீதிமன்றம்?

0 2507
மெகுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்குமா கரீபியன் உச்சநீதிமன்றம்?

கிழக்கு கரீபியன் உச்சநீதிமன்றத்தில் தொழிலதிபர் மெகுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான விசாரணை இன்று நடைபெறுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியுடன் சேர்ந்து 14 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி செய்த விவகாரத்தில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி மெகுல் சோக்சி... ஆண்டிகுவா நாட்டில் பதுங்கியிருந்த அவர் அங்கிருந்து தப்பி கியூபா செல்ல முயற்சித்தபோது, டொமினிக்கன் தீவில் இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆயினும் மெகுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆட்சேபம் தெரிவித்து அவர் வழக்கறிஞர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சோக்சியை மீண்டும் ஆண்டிகுவா அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் மெகுல் சோக்சியின் குடியுரிமை இந்தியாவில் இருப்பதால் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வருகிறது. இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது. மெகுல் சோக்சியை இந்தியா அழைத்து வர அமலாக்கத்துறை அதிகாரிகள் தனி விமானத்தில் டொமினிக்கன் தீவுக்குச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments