அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை கண்டறியும் மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்ரமணியன்
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை கண்டறியும் மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் ஸ்கிரீனிங் மையம் மற்றும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு வார்டை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகத்தில் இதுவரை 518 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்நிலையில், 17 பேர் உயிரிழந்தாக தெரிவித்தார்.
மாசுபட்ட தண்ணீரை ஆக்சிஜன் உடன் பயன்பாடுத்துவதால்கூட கருப்பு பூஞ்சை ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் குறிப்பிட்டார்
Comments