சீனாவில் H10N3 வைரஸ் மூலம் பறவை காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நபர் விவரங்களை வெளியிட்டுள்ளது அந்நாட்டு தேசிய சுகாதார துறை

0 5865

சீனாவில் பறவைகளிடம் இருந்து H10N3 வைரஸ் மூலம் பறவை காய்ச்சல்  ஏற்பட்ட முதலாவது நபரின் விவரங்களை அந்நாட்டு தேசிய சுகாதார துறை வெளியிட்டுள்ளது.

ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜென்ஜியாங்க் நகரில் 41 வயதான ஆண் ஒருவருக்கு பறவையிடம் இருந்து இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதற்கு முன் வேறு எந்த நாட்டிலும் இது போன்ற வைரஸ் பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக தகவல் இல்லாத நிலையில், இது அதிக எண்ணிக்கையில் மனிதர்களிடம் தொற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நபரிடம்  பரவிய வைரசின் மரபியல் கூறுகளை ஆராய்ந்து பறவை காய்ச்ல்  என்பதை சீன மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அவரிடம் தொடர்பு வைத்திருந்த நபர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments