உயிரை பணயம் வைத்து பணியாற்றி வரும் செவிலியர்கள் (ம) சுகாதார உழியர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை-எடியூரப்பா
கொரோனா தடுப்பு பணியில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வரும் செவிலியர்கள் மற்றும் சுகாதார உழியர்களுக்கு
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுடன் முதல்வர் எடியூரப்பா காணொலி மூலம் கலந்துரையாடினார்.
கொரோனா தடுப்பு பணியில் உள்ள செவிலியர்களுக்கு மாத ஊதியத்துடன் ஊக்கத் தொகையாக 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த 3 செவிலியர்கள் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், காணொலியில் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Comments