பயிரை மேய்ந்த வேலி - பாலியல் வழக்கில் ஜூடோ மாஸ்டர்

0 4485
பயிரை மேய்ந்த வேலி - பாலியல் வழக்கில் ஜூடோ மாஸ்டர்

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சென்னை ஜூடோ மாஸ்டர் சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் சீண்டல்களில் இருந்து தப்புவது எப்படி என பயிற்சி கொடுத்த ஜூடோ மாஸ்டரே பாலியல் வழக்கில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

அண்ணா நகரில் ஜூடோ, கராத்தே போன்ற தற்காப்பு கலை பயிற்சி பள்ளியை நடத்தி வந்தவர் கெபிராஜ். அண்மையில் சர்ச்சையில் சிக்கிய பிஎஸ்பிபி பள்ளியில் கராத்தே பயிற்சியாளராகவும் இவர் பணிபுரிந்து வநதுள்ளார். இந்த நிலையில், கேரள பெண் ஒருவர் தாம் கெபிராஜால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக போலீசாரிடம் புகாரளித்தார். சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள பத்மா சேஷாத்ரி மில்லினியம் பள்ளிக்கு ஜூடோ போட்டிக்காக கடந்த 2013-ஆம் ஆண்டு வந்ததாகத் தெரிவித்துள்ள கேரளப் பெண், அப்போது கெபிராஜின் தொடர்பு கிடைத்து, அவரது பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஜூடோ கற்றுகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருமுறை நாமக்கல்லில் நடந்த ஜூடோ போட்டியில் கலந்துகொள்வதற்காக அழைத்துச் சென்று திரும்பும் வழியில் கெபிராஜ் காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பயிற்சி என்ற பெயரில் பல சந்தர்பங்களில் பாலியல் சீண்டலில் அவர் ஈடுபட்டதாகவும் அந்த கேரளப் பெண் கொடுத்த புகாரின் பேரில் கெபிராஜை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையின்போது, முதலில் நான் அவனில்லை என்ற பாணியில் கெபிராஜ் பதிலளித்ததாகக் கூறும் போலீசார், அவருடன் நாமக்கல் சென்ற மூன்று கராத்தே மாஸ்டர்களின் வாக்குமூலத்துக்குப் பிறகு உண்மை வெளிப்பட்டதாகக் கூறுகின்றனர்.

பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கெபிராஜ் பயிற்சி அளித்து வந்ததுதான் இதில் வேடிக்கை என போலீசார் கூறுகின்றனர். கெபி ராஜின் இந்த தற்காப்பு பயிற்சி பள்ளியில் மேலும் சில இளம்பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அது குறித்து தீவிர விசாரணையில் இறங்க உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments