புதிய டிஜிட்டல் கொள்கைகளை டுவிட்டர் நிறுவனம் அமல்படுத்தியே ஆக வேண்டும்-டெல்லி உயர் நீதிமன்றம்
இந்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை டுவிட்டர் நிறுவனம் அமல்படுத்தியே ஆக வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆச்சார்யா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதீபதி ரேகா பிள்ளை, நீதிமன்ற தடை எதுவும் இல்லையெனில், புதிய டிஜிட்டல் கொள்கைகளை டுவிட்டர் ஏற்றுக் கொள்ளவேண்டும் என கூறினார். டுவிட்டர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாங்கள் புதிய கொள்கைகளை ஏற்றதுடன், குறைதீர்க்கும் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதாகவும் கூறினார்.
ஆனால் அதை மத்திய அரசு வழக்கறிஞர் மறுத்தார். இதை அடுத்து டுவிட்டருக்கும், மத்திய ஐடி அமைச்சகத்திற்கும் நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டு நீதிபதி வழக்கை தள்ளி வைத்தார்.
Comments