வருங்கால வைப்பு நிதி விதிகளில் திடீர் மாற்றம்..!
வருங்கால வைப்பு நிதிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் நிறுவனத்தின் பங்களிப்புத் தொகையைப் பணியாளரின் கணக்கில் சேர்ப்பது நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அவை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டியது அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் கடமையாகும்.
அவ்வாறு இணைக்கத் தவறினால் நிறுவனத்தின் பங்களிப்பு தொழிலாளரின் கணக்கில் சேர்க்கப்படாது. சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரசால் வழங்கப்படும் நலத் திட்டங்கள் அமைப்புச் சாராத் தொழிலாளர்களுக்குச் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments